Sunday, March 6, 2011

I

இன்னும் இருக்கிறேன் !!!

Wednesday, February 13, 2008

நிஜமாதான் சொல்றேன்!

பொதுவா வாழ்கையில் நாம சந்தோசமா இருக்கிற நேரங்கள்,நம்மை அறியாமலே வேகமா கடந்து போய்டும்."

பயங்கரமா வேலை செஞ்சி உடம்பு ஓடாய்(!!) தேஞ்சு போனதால, போன வாரம் ஒரு ரெண்டு நாள் விடுப்பில் இருந்தேன்.அப்போ பார்த்த படம் தான் 'கற்றது தமிழ்'.பொதுவாய் இந்த படம் சொல்ல வந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தாலும், ஒரு தமிழ் படித்த மனிதனின் வாழ்க்கை சீரழிவை,இந்த படம் நன்றாகவே சொல்லியிருக்கிறது.

இந்த படம் எனக்கு பிடித்திருப்பதாக பசங்க கிட்ட தெரியாத்தனமா சொல்லி வேற தொலைச்சுட்டேன்!!!,அதுக்கப்புறம் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது!!!.சும்மா tea குடிக்க போகலாமுன்னு கூப்பிட்டா கூட 'நெஜமா தான் சொல்றியா?' -ன்னு ஒரே இம்சைய கூட்டிடானுங்க!!! .

ஆனா நிஜமாகவே படத்தில் இந்த வசனம் பேசப்படும் காட்சிகள் மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.(நீங்களும் 'நிஜமா தான் சொல்றியா?"-ன்னு கேட்டுடாதிங்க!!)

அதே மாதிரி மேலே முதல் வரிகளில் காணப்படும் வசனமும் இதே படத்தில் வருவது தான்.நான் இந்த பதிவை எழுத தூண்டியதும் அவை தான்.

அப்படியே ஒரு நிமிஷம் மல்லாக்க படுத்து யோசிச்சி பாத்தாக்கா உங்களுக்கே இந்த வரிகளின் உண்மை புரியும்.நான் அதேமாதிரி மல்லாக்க படுத்து யோசிச்சி பாத்து எழுதியது தான் பின்வரும் பத்திகள்.

நான் ஸ்கூல் படிக்கும்போது, காலேஜ் படிக்கிற அண்ணன்களை பாத்து அவங்கள மாதிரி நானும் காலேஜ் போயி கலக்கணும்-ன்னு நெனச்சேன்.'உதயம்' படத்தில,(அதாங்க! நம்ப நாகார்ஜுன் ஒரு கையில வளையல் போட்டுக்கிட்டு நடிச்ச படம்) " BOTANY கிளாசும் உண்டு! மேட்னி ஷோவும் உண்டு!" பாட்டுல வரமாதிரி, காலேஜ்ல எல்லாரும் ஆடிகிட்டு இருப்பாங்கன்னு எனக்கு ஒரு நெனப்பு.ஆனா காலேஜ் போனதும் Lecturers முதல் lab assitants வரை பண்ண torture தாங்கமுடியாமல், எப்படா வேலைக்கு போவோம்னு ஆயிபோச்சு.அப்புறம் ஒருவழியா வேலைக்கு சேர்ந்து, இப்போது குப்பையும் கொட்டிக்கொண்டிருக்கிறேன்!(அப்படி என்ன குப்ப கொட்டுற வேலை?.அட! கழுத கெட்டா குட்டிசுவரு!.கரெக்ட்!! SOFTWARE தான்!).ஆனா இப்போ நினைச்சு பாத்தாக்கா, School-லே நான் மிக மிக சந்தோசமா இருந்த நேரங்கள் நிறைய இருந்திச்சு, College-லும் நிறைய சந்தோஷங்கள் இருந்தது.ஆனா அதை அந்த சமயத்தில் உணராமல் இருந்திருக்கிறேன் அல்லது அந்த சந்தோசமான தருணங்கள் நான் அறியாமல் வேகமாக கடந்து போயிருக்கிறது.

அப்பாடா!! இனிமே போடப்போற பதிவுக்கு ஒரு வழியா Buildup கொடுத்தாச்சு!!!

Saturday, December 15, 2007

ஏன் எழுதுகிறேன்?

சரி....சென்ற பதிவில் அந்த MILLION DOLLAR (???) கேள்விக்கு விடையளிப்பதாய் சொல்லியிருந்தேன் அல்லவா?

அதற்கான SERIOUS விடை ....

நான் டுபுக்கு அவர்களின் மகா ரசிகன்!!! அவர் எழுதும் பதிவுகளை ஒரு சமயம் ACCIDENTENTAL-லாய் படிக்க நேரிட்டது.அவரின் எழுத்து நடை என்னை வெகுவாய் கவர்ந்தது.நான் எப்போவாவது எழுத நேரிட்டால் என் நடை கண்டிப்பாய் டுபுக்கு அவர்களை போல் படிப்பவர்களை கட்டி போடுவதாய் இருக்க வேண்டுமென நான் எண்ணியதுண்டு.அதேபோல் வெட்டிப்பயல் அவர்களும் என்னை கவர்ந்த இன்னொரு வலை பதிவாளர்!!!!.இம்சை அரசியின் பதிவுகளும் என்னை வியக்க வைத்துள்ளன.

so they are my true inspirations.....

Friday, December 14, 2007

ஏன் எழுதுகிறேன்?

ஏதோ அல்லது எல்லா பண்டிகைகளிலும்,ஏதோ அல்லது எல்லா தமிழ் தொலைக்காட்சிகளிலும்,ஏதோ அல்லது எல்லா நிருபர்களும்(??), ஏதோ அல்லது எல்லா நடிகைகளை பார்த்து 'நீங்க நடிக்க வந்தது எப்படி?' என்றொரு உலகமகா கேள்வியை கேட்பார்.

அந்த கேள்விக்கான விடைக்கும் இந்த பதிவிற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது..ஆனால்...அந்த கேள்விக்கும் இந்த பதிவிற்கும் தொடர்பு உண்டு.எப்படி என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!!(எப்படி வாசகர்களை(!!!) கட்டி போடறேன் பாருங்க? :-))

சரி மேட்டருக்கு வருவோம் சாரே!!! இதே மாதிரி என்னை பார்த்து யாராவது நீங்க பதிவு போட வந்தது எப்படி?;-னு கேட்டா( இப்ப உன்னை யாருடா கேட்டா?),நான் என்ன பதில் சொல்லுவேன்?

அதாகப்பட்டது நான் எல்கேஜீ-ல படிக்கும் போதே,மத்த பொடியன்கள் 'அணில்,ஆடு, இலை' எழுதுவாங்க!!.ஆனா நான் அப்பவே அணில்,அட்டுகுட்டி,இலை சங்கதிகளை சும்மா அசால்டா பலகைல வரைஞ்சு TEACHER வயித்துல பயங்கரமா புளிய கரைபேன்..அப்புறம் அந்த 'திறமை' (???) அப்படியே DEVELOP ஆயி ஸ்கூல்,காலேஜ் போகும்போது பாக்குற பொண்ணுகளை பத்தியெல்லாம் கவிதை/கவிதை எழுதி கரைபுரண்டோடியது.(பல போர்களையும்,விழுபுண்களும் இந்த 'திறமையால்' பெற்ற மாவீரன் நான்!!!!).SO இத்தனை BACKGROUND உள்ள நான் பதிவு எழுதினலென்ன?.

என்ன மக்கா மண்டை காயுதா?..சரி சரி! விளையாட்டை இதோட நிறுத்திட்டு மேட்டருக்கு வருவோம்.

ஆ! மணி என்ன ஆச்சு சாரே? என்ன ஆறு மணி ஆச்சா? ஐயோ! வுட்டுக்கு ஓடிடனும், இல்லாட்டா இந்த PM புடிச்சி வேலை கொடுத்துருவார்.

அப்ப அந்த MILLION DOLLAR கேள்விக்கு பதில் இதுதானா?...நிச்சயம் இல்லை..அதுக்கான SERIOUS மற்றும் உண்மையான பதிலை அடுத்த பதிவில் சொல்கிறேன்!!

உடு ஜூட் !!!!!

Thursday, December 13, 2007

நலமா?

நலமா? நட்பே!
பயங்கர கஷ்டப்பட்டு தமிழுல டைப் பண்ணி google transliter -ல தில்லாலங்கடி வேலை பண்ணி இந்த பதிவை போடறேன்.யப்பா!! இப்பவே கண்ணை கட்டுதே! ஆனா நிறைய எழுதனுமுன்னு ஆசை படறேன் (நமகென படிகறவன் தான் பாவம்!!:-))
சரி இப்ப போறேன் ஆனா திரும்ப .... வருவேன் !!!!! :-)

Thursday, December 6, 2007